வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து மீண்டும் சதேகத்தை எழுப்பிய ஜப்பான்


வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து  மீண்டும்  சதேகத்தை எழுப்பிய ஜப்பான்
x
தினத்தந்தி 27 Jun 2020 8:24 AM GMT (Updated: 27 Jun 2020 8:24 AM GMT)

வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து சந்தேகங்கள் இருப்பதாக ஜப்பான் கூறியுள்ளதால், மீண்டும் கிம் ஜாங் உன்னைப் பற்றிய சந்தேகங்கள் எழுத் துவங்கியுள்ளது.

டோக்கியோ

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சில நாட்கள் பொதுவெளியில் தென் படாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாகவும், அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.ஆனால் அது எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில், கிம் ஜாங் உன் வடகொரியாவின் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் சில நாட்கள் கழித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து தென்கொரியாவுடன், சமீபத்தில், மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வடகொரியா எடுத்து வருகிறது.இப்படி திடீரென்று வடகொரியாவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜப்பானின் பாதுகாப்பு மந்திரி டரோ கொனோ, வடகொரியாவில்சமீபத்திய இயக்கங்கள் அனைத்தும் மிகவும் விசித்திரமானவையாக உள்ளது. அந்நாட்டின் தலைவரான கிம் ஜாங் உன்னின் உடல் நலம் குறித்து எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

கிம் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முயற்சித்து வருகிறார். ஏனெனில் நாடு முழுவதும் வைரஸ் பரவுகிறது. ஜப்பான், அமெரிக்கா போன்ற பலர் அவரைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் எதுவும் விரிவாகத் தெரியவில்லை. உளவுத்துறை பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க எனக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.

ஜப்பானின் இந்த சந்தேகத்தால், தற்போது மீண்டும் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் எழ ஆரம்பித்துள்ளன.


Next Story