பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் எட்வர்ட் பிலிப் வெற்றி


பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் எட்வர்ட் பிலிப் வெற்றி
x

பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் எட்வர்ட் பிலிப் வெற்றி பெற்றார்.

பாரீஸ்,

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி தேதி முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 2வது கட்ட தேர்தல் மார்ச் 22-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் நார்மாண்டி பிராந்தியத்திலுள்ள லி ஹவ்ரே நகரில் அந்த நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் போட்டியிட்டார். இதில் அவர் 58.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் லி ஹவ்ரே நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அவர் தான் மேயராக தேர்வு செய்யப்பட்டாலும் பிரதமர் பதவியில் தொடருவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story