சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு


சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 July 2020 6:04 AM IST (Updated: 1 July 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரியாத்,

கொரோனா வைரஸ் பாதிப்பில் அரபு நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டு அரசு எடுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கடந்த 2 வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்தது.

ஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4000 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அதேபோல் நேற்று முன்தினம் ஒரேநாளில் 48 பேர் உயிரிழந்ததின் மூலம் இங்கு கோரோணா பலி எண்ணிக்கை 1,599 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது என சவுதி அரேபிய அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story