பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்தது


பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்தது
x
தினத்தந்தி 20 July 2020 9:31 AM GMT (Updated: 20 July 2020 9:31 AM GMT)

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலியா,

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 23,529 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 716 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை 79,488 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர் என, பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

“கொரோனாவைப் பற்றி மக்கள் கவலைப்படக் கூடாது. முகக்கவசம் அணியத் தேவையில்லை. மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும்” என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார். இந்நிலையில், அதிபர் ஜெய்ர் போல்சனோராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story