பிரான்சில் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன


பிரான்சில் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன
x
தினத்தந்தி 27 July 2020 8:09 AM GMT (Updated: 27 July 2020 8:09 AM GMT)

பிரான்சில் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன.

பாரீஸ்,

கடந்த 2016 ஆம் ஆண்டு  இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஃபிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார். 

இந்நிலையில், மே மாதம் வர விருந்த ரஃபேல் விமானங்களின் வருகை,கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரஃபேல் போர் விமானங்கள், இன்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன. ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் வரும் 29ஆம் தேதி அவை இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகிறது.

ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானிகளே இயக்கிக் கொண்டு இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story