கொரோனாவிற்கு மருந்து சாப்பிடாமலே குணமாகி விட்டேன் - பெலாரஸ் அதிபர்


கொரோனாவிற்கு மருந்து சாப்பிடாமலே குணமாகி விட்டேன் - பெலாரஸ் அதிபர்
x
தினத்தந்தி 29 July 2020 3:04 PM GMT (Updated: 29 July 2020 3:11 PM GMT)

கொரோனாவிற்கு மருந்து சாப்பிடாமலே குணமாகி விட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ தெரிவித்துள்ளார்.

மின்ஸ்க்,

பெலாரசில் இதுவரை 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதோடு, 543 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மின்ஸ் நகரில் நடந்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ பேசியதாவது:-

நான் என் சொந்த முயற்சியிலேயே கொரோனாவிலிருந்து விடுபட்டுள்ளேன். நம் நாட்டில் 97 சதவீதத்திற்கும் அதிகமானோர் அறிகுறி இல்லாத கொரோனாவோடு இருப்பார்கள்.

கொரோனா பாதிக்காமல் இருக்க வோட்கா பானம் அருந்துங்கள். சூரிய ஒளியில் ஓய்வெடுங்கள். கொரோனாவை கண்டு அச்சப்பட வேண்டியதில்லை, கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதில்லை. ஐஸ் ஹாக்கி விளையாடுவதாலும் குணமாகி விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வோட்கா அருந்துங்கள் என அதிபரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story