கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 1.71 கோடியாக உயர்வு அமெரிக்காவில் மரணம் 1.50 லட்சத்தை தாண்டியது.


கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 1.71 கோடியாக உயர்வு அமெரிக்காவில் மரணம் 1.50 லட்சத்தை தாண்டியது.
x
தினத்தந்தி 30 July 2020 1:45 AM GMT (Updated: 30 July 2020 1:45 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 1.71 கோடியாக உயர்ந்து உள்ளது அமெரிக்காவில் கொரோனா மரணம் 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது.

வாஷிங்டன்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்களின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1.06 கோடியாக உயர்ந்து உள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.69 லட்சமாக அதிகரித்து உள்ளது.

சீனாவில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 84,060 ஆக அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 66,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45.67 லட்சமாக உயர்ந்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு  இறந்தவர்களின் எண்ணிக்கை 150,000 ஐ தாண்டியுள்ளது. நாட்டின் 50 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 1,000க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளன என கூறபட்டு உள்ளது.


Next Story