செயற்கைக்கோள் திட்டத்தில் சீனா படுதோல்வி- சுற்றுவட்ட பாதையை அடைய தவறியது


செயற்கைக்கோள் திட்டத்தில் சீனா படுதோல்வி- சுற்றுவட்ட பாதையை அடைய தவறியது
x
தினத்தந்தி 13 Sep 2020 10:30 PM GMT (Updated: 13 Sep 2020 10:41 PM GMT)

தோல்விக்கான சரியான காரணம் குறித்து அறிய விசாரணை நடந்து வருவதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

பீஜிங், 

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. ‘

சிலிங்1’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘குவைசு1ஏ’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சுற்றுவட்ட பாதையை அடைய தவறிவிட்டது. இதன் மூலம் சீனாவின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது.

முறையற்ற செயல் திறன் காரணமாக இந்த பணி தோல்வியடைந்ததாக ஜிகுவான் ஏவுதள மையம் தெரிவித்ததாகவும், எனினும் தோல்விக்கான சரியான காரணம் குறித்து அறிய விசாரணை நடந்து வருவதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


Next Story