மொபைலில் பேசிய படி காரை ஓட்டி முதியவர் மீது மோதிய இளம்பெண்; அவர் மோதியது யார் மீது தெரியுமா...?


மொபைலில் பேசிய படி காரை ஓட்டி முதியவர் மீது மோதிய இளம்பெண்; அவர் மோதியது யார் மீது தெரியுமா...?
x
தினத்தந்தி 22 Sep 2020 10:27 AM GMT (Updated: 22 Sep 2020 10:27 AM GMT)

இங்கிலாந்தில் முதியவர் ஒருவர் மீது காரை மோதிவிட்டு தப்பிவிட்டார் ஒரு பெண். ஆனால், தான் காரை மோதியது தன் சொந்த மாமனார் மீதுதான் என்பது பின்னர்தான் அவருக்கு தெரியவந்தது.

லண்டன்

இங்கிலாந்தில் பதாஹா பேகம் அபிதீன் (28) என்பவர் லெய்செஸ்டரில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தில் மொபைல் பார்த்துக்கொண்டே கார் ஓட்டியபோது,  ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருப்பதைக் கவனிக்காமல் அவர் மீது காரை மோதிவிட்டார்.

அந்த நபர் தூக்கி வீசப்பட, காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் பதாஹா. ஆனால், அவருக்கு தெரியாது, தான் காரை மோதியது தன் மாமனார் மீதுதான் என்று.வீட்டுக்கு திரும்பும் முன், சேதமடைந்திருந்த முன் காரின் முன் பக்கக் கண்ணாடியை பழுது நீக்கிவிட்டு, விபத்து நடந்தபோது தான் அனுப்பிய மற்றும் தனக்கு வந்த குறுஞ்செய்திகளை மொபைலிலிருந்து நீக்கியிருக்கிறார் .

இதற்கிடையில், சிசிச்டிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்கள்.விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர் அவர் அல்ல என்பது தெரியவந்தது.பின்னர்தான் அந்த காரை ஓட்டியவர் பதாஹா என்றும், காரை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற அவர், தன் காரிலிருந்த மொபைலை திருடன் திருட முயன்றபோது காரின் முன் கண்ணாடி சேதமடைந்ததாக கூறி, அதை சரி செய்தது  பொய் கூறியிருந்ததும் தெரியவந்தது.

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டியதற்காக ஆறு மாதங்களும், குற்றத்தை மறைத்தற்காக 12 மாதங்களுமாக பதாஹாவுக்கு மொத்தம் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு கார் ஓட்டவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story