வங்கி கடன் வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் அனில் அம்பானியிடம் விசாரணை


வங்கி கடன் வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் அனில் அம்பானியிடம் விசாரணை
x
தினத்தந்தி 26 Sep 2020 7:19 PM GMT (Updated: 26 Sep 2020 7:19 PM GMT)

61 வயதான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

லண்டன்,

3 சீன வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், 61 வயதான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அனில் அம்பானியின் சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் காணொலி காட்சி மூலம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மும்பையில் இருந்தபடி அவர் பதில் அளித்தார். அப்போது சீன வங்கிகள் சார்பில் ஆஜரான வக்கீல், அனில் அம்பானியிடம் ஆடம்பரமாக வாழ்வது பற்றியும், அவரிடம் ஆடம்பர கார்கள் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பினார். அதற்கு அனில் அம்பானி பதில் அளிக்கையில், ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் தான் ஆடம்பரமாக வாழ்வதாக கூறப்படுவதாகவும், ஆனால் தான் எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story