உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 26 Sep 2020 10:00 PM GMT (Updated: 26 Sep 2020 8:07 PM GMT)

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முஸ்லிம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகையின் பழைய அலுவலகத்தில் நேற்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

* பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முஸ்லிம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகையின் பழைய அலுவலகத்தில் நேற்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸ் அரசு இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என அறிவித்துள்ளது.

* வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் பிளாடீயு மாகாணம் வாங் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் போகோஹராம் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

* வடகொரியா ராணுவத்தால் தென்கொரியா மீன் வளத்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வடகொரியாவுக்கு தென்கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.

* அமெரிக்காவில் சீன பத்திரிகையாளர்கள் 90 நாட்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும் என்கிற வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர் மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Next Story