டொனால்டு டிரம்ப் ரஷிய அதிபர் புதினின் செல்ல நாய்க்குட்டி -பிடன்


டொனால்டு டிரம்ப் ரஷிய அதிபர் புதினின் செல்ல நாய்க்குட்டி -பிடன்
x
தினத்தந்தி 30 Sep 2020 8:13 AM GMT (Updated: 30 Sep 2020 8:13 AM GMT)

டொனால்டு டிரம்ப் ரஷிய அதிபர் புதினின் செல்ல நாய்க்குட்டி என ஜனாதிபதி வேட்பாளர் பிடன் குற்றம்சாட்டினார்

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதலாவது விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நெறியாளர் கிரீஸ் வேலஸ் தொகுத்து வழங்கினார்.

விவாதத்தில் பங்கேற்ற தற்போதைய ஜனாதிபதியும் , குடியரசு கட்சியின் வேட்பாளருமான டிரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் பலமுறை தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டனர். 

கொரோனாவை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டதாக ஜோ பிடன் குற்றம்சாட்டிய போது, இத்தகைய பணியாற்றும் சக்தி உங்கள் ரத்தத்திலேயே இல்லை என்று கோபத்துடன் சாடினார் டிரம்ப்.

முகக்கவசம் பற்றிய விவாதம் நடைபெற்ற போது கோட்டில் இருந்து முகக்கவசத்தை எடுத்துக்காட்டிய டிரம்ப், ஜோ பிடனை போல மிகப்பெரிய முகக்கவசத்தை தாம் அணியவில்லை என்றார்

தாம் ஒரு சிறந்த ஜனாதிபதி என்று டிரம்ப் பெருமிதம் தெரிவித்த போது அமெரிக்கா இதுவரை சந்தித்திராத மிக மோசமான அதிபர் நீங்கள்தான் என்று  ஜோ பிடன் நேரடியாக குற்றம்சாட்டினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியபோது, ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த ஜோ பிடன் வாயை மூடுங்கள் என்று டிரம்பை நேரடியாக விமர்சித்தார்.

அமெரிக்கர்கள் அனைவரும் அறிவார்கள் டிரம்ப் மிகப்பெரிய பொய்யர் என்று ஜோ பிடன் தெரிவித்தார். அதனை மறுத்த டிரம்ப் தம்மை பற்றி பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தார்.

டொனால்டு டிரம்ப்  ரஷியாவை எதிர்கொள்ளத் தவறிவிட்டார், ரஷிய அதிபரின் செல்ல நாய்க்குட்டி என ஜனாதிபதி வேட்பாளர் பிடன் குற்றம்சாட்டினார்

வாத பிரதிவாதங்கள் களைகட்டி, தனிநபர் தாக்குதல் தொடர்ந்த போதும் இரு தலைவர்களும் தங்கள் நாட்டின் மீது கொண்டிருந்த அக்கறையை மிக கவனத்துடன் வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது...

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்த மாதம் 7ஆம் தேதி இதேபோல் நேரலையில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர். 

Next Story