ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளும் ரஷியா அதிபர் புதின்


ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளும் ரஷியா அதிபர் புதின்
x
தினத்தந்தி 30 Sep 2020 8:41 AM GMT (Updated: 30 Sep 2020 8:41 AM GMT)

ரஷியா அதிபர் புதின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்கோ

தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை, ரஷிய அதிபர் புதின் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில், மூன் ஜே இன்னை சந்திப்பதற்கு முன் புதின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷியா இதுவரை வெளியிடவில்லை. ரஷியாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷியாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் ரஷியா அதிபர் புதின் செலுத்தினார். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷியா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷியா அறிவித்தது.

ரஷியாவில் கொரோனாவால் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 11,59,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story