உலக செய்திகள்

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை விதிப்பு + "||" + Pakistan bans TikTok after receiving complaints against 'immoral, indecent' content

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை விதிப்பு

டிக் டாக் செயலிக்கு  பாகிஸ்தானிலும் தடை விதிப்பு
ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
இஸ்லமபாத்,

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு. அந்த வகையில்,  டிக் டாக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான விடீயோக்கள் வெளியாவதாக  கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது.  

சமூகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்த தொடர் புகார்களை அடுத்து  டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சீனாவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தான், அந்நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான செயலியை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டிக் டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கும் பட்சத்தில் மீண்டும் டிக்டாக் செயலி சேவையை தொடர் அனுமதி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
2. சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது; ஆனால் சீனாவின் பெயரைக்கூட உச்சரிக்க மறுக்கிறார் பிரதமர் - மக்களவையில் ஒவைசி பேச்சு
சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது; ஆனால் சீனாவின் பெயரைக்கூட உச்சரிக்க மறுக்கிறார் பிரதமர் மோடி என்று மக்களவையில் ஒவைசி கூறினார்.
3. திபெத்தின் தலாய்லாமா தேர்வில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டம்; டிரம்ப் கையெழுத்திட்டார்
திபெத்தின் புதிய தலாய்லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் ஒரு சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
4. காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப். அதிகாரி வீரமரணம்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப். அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
5. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.