நைஜீரியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஊரடங்கு அமல்


நைஜீரியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 20 Oct 2020 11:24 PM GMT (Updated: 20 Oct 2020 11:24 PM GMT)

நைஜீரியாவில் பாதுகாப்பு வீரர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

லாகோஸ், 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. இந்த நாட்டில்  போலீஸ் பிரிவில் கொள்ளை தடுப்பு சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த சிறப்பு பிரிவு போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் சட்ட விரோத கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நைஜீரிய மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட கொள்ளை தடுப்பு பிரிவை கலைக்க வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக லாகோஸ் நகரில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. 

போராட்டங்களையடுத்து,  சிறப்பு படை பிரிவை கலைப்பதாக  அதிபர் முகம்மது புஹாரி அறிவித்தார். ஆனாலும், போராட்டத்தை கைவிட மறுத்த போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படை பிரிவில் மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற புதிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கு மத்தியில் போராட்டத்தை கிரிமினல்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக லாகோஸ்  ஆளுநர் குற்றம் சாட்டினார். 

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்து கிடக்கும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்கள் வெளியாகியுள்ளன. எனினும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இல்லை. துப்பாக்கிச்சூட்டை அடுத்து லாகோஸ் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story