பத்திரிகைகளால் யார்க்ஷையர் ரிப்பர் என எழுதப்பட்டவரும் வடக்கு இங்கிலாந்து மக்களை நடு நடுங்க வைத்த, கொலையாளி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
லண்டன்,
பத்திரிகைகளால் யார்க்ஷையர் ரிப்பர் என எழுதப்பட்டவரும் வடக்கு இங்கிலாந்து மக்களை நடு நடுங்க வைத்த, கொலையாளி கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து பத்திரிகைகளால் யார்க்ஷையர் ரிப்பர் என எழுதப்பட்ட பீட்டர் வில்லியம் ஸட்கிலிப்பே 1975 முதல் 1980 வரையான காலகட்டத்தில் சுமார் 13 பெண்களை கொடூரமாக கொலை செய்துள்ளார். இவரது கொலைவெறித் தாக்குதலில் இருந்து 7 பெண்கள் உயிர் தப்பியதுடன், சிலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் தொடர் நடவடிக்கைகளுக்கு பிறகு 1981 ஆம் ஆண்டு ஸட்கிலிப்பே கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபணம் செய்யப்பட்டதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 74 வயதாகும் பீட்டர் வில்லியம் ஸட்கிலிப்பே கொரோனா பெருந்தொற்றில் சிக்கி மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.