உலக செய்திகள்

ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Russia has confirmed 23,610 coronavirus infections in a single day

ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இன்றைய நிலவரப்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. 

ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,15,608 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பாக இது அமைந்துள்ளது.

அதேசமயம் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,850ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25,573 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 6,438 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தொற்று பரவல் மிக தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் ஒரேநாளில் அதிக அளவாக புதிதாக 28,145 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 23.7 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.4 லட்சமாக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் மேலும் 459 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 22.6 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் மருத்துவ தரவுகளை சமர்பிக்க உலக சுகாதார மையம் அறிவுறுத்தல்
ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் மருத்துவ தரவுகள் குறித்து தெரிவிக்குமாறு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
5. மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,645 புதிதாக 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.