அமெரிக்காவில் பள்ளிகளை திறக்ககோரி பெற்றோர்கள்-மாணவர்கள் போராட்டம்


அமெரிக்காவில் பள்ளிகளை திறக்ககோரி பெற்றோர்கள்-மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2020 8:21 AM GMT (Updated: 20 Nov 2020 8:21 AM GMT)

அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்திப் பெற்றோர்களும் மாணவ, மாணவியரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாஷிங்டன்,

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அத்துடன் உயிரிழப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் அமெரிக்காவில் 181,099 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அத்துடன் ஒரு நாளில் மட்டும் 1974 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அமெரிக்காவில் அவ்வப்போது கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அதன்படி

நியூயார்க் நகரில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என மேயர் அறிவித்தார்.

மேயரின் இந்த அறிவிப்புக்குப் பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாணவ, மாணவிகளுடன் போராட்டங்களில் ஈடுபட்ட பெற்றோர், பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் பார்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பள்ளிகள் இல்லாமல் குழந்தைகள் பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்று போராட்டத்தில் வலியுறுத்தினர். 

பள்ளிகள் பாதுகாப்பானவை, பள்ளிகளை மூடியே வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தினர். 

Next Story