அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் எனத்தகவல்


அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் எனத்தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2020 12:42 AM GMT (Updated: 21 Nov 2020 12:42 AM GMT)

அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. 

இந்த துப்பாக்கிச்சூட்டில்  பலர் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் குறிப்பிட்ட வணிக வளாகத்தை 75- க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர்.  துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வணிக வளாகத்திற்குள் இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

Next Story