அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர்-பேஸ்புக் கணக்குகள் ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் - அறிவிப்பு


அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர்-பேஸ்புக்  கணக்குகள் ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் - அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2020 12:51 AM GMT (Updated: 23 Nov 2020 12:51 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர். பேஸ்புக் கணக்குகள் ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வாஷிங்டன்

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார்.ஆனால் நடப்பு அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் அவரது டுவிட்டர் பதிவுகள் பல உண்மைக்கு புறம்பானவை என குறிப்பிட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கான போடஸ் (@POTUS), தற்போது டிரம்ப்பிடம் இருந்து வரும் நிலையில்,அந்த கணக்கு திரும்ப பெறப்பட்டு, ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20ம் தேதியன்று ஒப்படைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த கணக்கை உலகத் தலைவர்கள் பலர் உள்ளிட்ட 3.2  கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல், டிரம்ப் டுவிட்டரின் சிறப்பு சலுகைகளை இழப்பார்.

அதுபோல் பேஸ்புக் சனிக்கிழமையன்று அதிபர் கணக்கை ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தது.

2017 ஆம் ஆண்டில், ஒபாமா நிர்வாகம் மற்றும் டிரம்ப் நிர்வாகம் ஆகிய இருவருடனும் இணைந்து ஜனவரி 20 ஆம் தேதி அவர்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளின் மாற்றம் தடையின்றி நடந்ததை உறுதிசெய்தோம்,அதுபோல் தற்போதும் இதைச் செய்வோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,  என்று பேஸ்புக் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Next Story