குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் பலி


குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் பலி
x
தினத்தந்தி 23 Nov 2020 8:47 AM GMT (Updated: 23 Nov 2020 8:47 AM GMT)

ஆல்கஹால் கிடைக்கவில்லை என்று குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 2 கோமாவில் உள்ளனர்..!

மாஸ்கோ

ரஷ்யாவில் ஒரு விருந்தின் போது, ​​மது பற்றாக்குறையால் மக்கள் கை சுத்திகரிப்பானை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கை சுத்திகரிப்பு குடித்த 7 பேர் இறந்தனர், 2 பேர் கோமா நிலைக்குச் சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது . 

ரஷியாவில் இதுவரை மொத்தம் 20,64,748 கொரோனா வைரஸ் பாதிப்புகள்  பதிவாகியுள்ளன, 35,778 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை, ரஷியாவில் 24,822 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.


Next Story