அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள்


அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள்
x
தினத்தந்தி 28 Nov 2020 1:03 PM GMT (Updated: 28 Nov 2020 1:03 PM GMT)

அமெரிக்காவின் தெற்கு உட்டாவில் உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் தெற்கு உட்டாவில்  உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு சில இது கலைப்பொருள் என்றும் , ஒரு சிலர் இது வேற்றுகிறகவாசிகளின் பொருள் என்றும் கூறி வருகிறார்கள். அந்த  இடத்திற்கு சாகச வீரர்கள் குழுவினர் சென்றுள்ளனர். ரெட் ராக் பாலைவனத்தில் ஆடுகள் கணக்கெடுப்புப் பணியின்போது, ஒரு பள்ளத்தாக்கின் அருகே தரையில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருந்த மர்ம உலோகப்பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த கட்டமைப்பை முதன்முதலில் ஒரு ஹெலிகாப்டர் பைலட் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள்  குழு கண்டு பிடித்தது பிக்ஹார்ன் ஆடுகளின் வருடாந்திர எண்ணிக்கைக்காக அந்த பகுதிக்கு மேலே ஹெலிகாப்டரில் அவர்கள் பறந்து கொண்டிருந்தனர். ஒற்றைப்பாதையை உன்னிப்பாக ஆராய்ந்த பைலட் பிரட் ஹட்ச்சிங்ஸ், இது ஒரு கலைஞரின் படைப்பாக இருக்கலாம் என்று எண்ணி உள்ளார்.

ஆர்வ மிகுதியால் இந்த இடத்திற்கு மக்கள் செல்லக்கூடும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக, பொருள் கண்டறியப்பட்ட துல்லியமான இடத்தை வெளியிட மறுத்துவிட்டனர். இந்நிலையில், டேவிட் சர்பர் தலைமையிலான குழுவினர் அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அதன் தோற்றம் குறித்த தெளிவான விவரங்கள் எதுவும் இல்லாத நிலையில், சமூக ஊடகங்களில் ஊகங்கள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.


அது 2011 இல் இறந்த கலைஞரான ஜான் மெக்ராக்கனுக்கு சொந்தமானதாக இருக்கலாம் , மெக்ராக்கனின் படைப்புகளை டேவிட் ஸ்விர்னர் கேலரி பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் அமெரிக்க நில மேலாண்மை பணியகம், இந்த விவகாரம் குறித்து  கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Next Story