அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்; மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்


அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்; மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்
x
தினத்தந்தி 28 Dec 2020 11:28 PM GMT (Updated: 28 Dec 2020 11:28 PM GMT)

கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அண்மையில் நிறைவேறியது.

வா‌ஷிங்டன், 

உலகிலேயே கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது.

அதேபோல் உயிரிழப்பு 3 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே சமயம் அங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அண்மையில் நிறைவேறியது.

ஆனால் இந்த நிதியில் அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரண தொகை போதுமான இல்லை எனக்கூறி மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இதன் மூலம் கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தலா 600 டாலர் (சுமார் ரூ.44 ஆயிரம்) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story