தென் ஆப்பிரிக்காவில் மது விற்பனைக்கு தடை, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு


தென் ஆப்பிரிக்காவில்  மது விற்பனைக்கு தடை,  கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2020 12:40 AM GMT (Updated: 29 Dec 2020 12:40 AM GMT)

தென் ஆப்பிரிக்கவில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டர்பன்,

தென் ஆப்பிரிக்கவில் உருமாற்றம்  அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ்  தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  அந்நாட்டில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  ஊரடங்கு மூன்று மடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. தொற்று பாதிப்பால் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நவம்பர் மாத இறுதிக்கு பிறகு தினசரி சராசரி  பாதிப்பு 10 ஆயிரம் முதல் 14 ஆயிரமாக உள்ளது. 

Next Story