அமெரிக்காவில் 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது; நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல்


அமெரிக்காவில் 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது; நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2020 7:55 PM GMT (Updated: 29 Dec 2020 7:55 PM GMT)

அமெரிக்காவில் 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது என்று அந்நாட்டு நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 1.92 கோடி பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன், 3.34 லட்சம் பேர் மரணத்தை தழுவியிருப்பதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி அங்கு பொதுமக்களுக்கு வேகமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இதுவரை 21 லட்சத்து 27 ஆயிரத்து 143 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தேசிய நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது. இதைப்போல நாடு முழுவதும் 1 கோடியே 14 லட்சத்து 45 ஆயிரத்து 175 டோஸ்கள் நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் அது கூறியுள்ளது.


Next Story