கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
x
தினத்தந்தி 30 Dec 2020 2:41 AM GMT (Updated: 30 Dec 2020 2:41 AM GMT)

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

வாஷிங்டன்

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார் . அது போல் கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.


Next Story