பிரெக்ஸிட்’ வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது


பிரெக்ஸிட்’ வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
x
தினத்தந்தி 30 Dec 2020 10:52 PM GMT (Updated: 30 Dec 2020 10:52 PM GMT)

‘பிரெக்ஸிட்’ வர்த்தக ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டார்.

லண்டன், 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஓராண்டுக்கு முன்பே வெளியேறியபோதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.

ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு முடியும் கடைசி நேரத்தில் ஒருவழியாக ‘பிரெக்ஸிட்’ வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் 80 பக்கங்களை கொண்ட இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 521 எம்.பி.க்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 73 எம்.பி.க்கள் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்தார்கள்.

இதையடுத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ‘பிரெக்ஸிட்’ வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறியது. இதனை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ராணி 2-ம் எலிசபெத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ராணி அதில் கையெழுத்திட்டதும் அது சட்டம் ஆக்கப்படும்.

Next Story