ரஷ்யாவில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா தொற்று


ரஷ்யாவில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 Jan 2021 8:29 PM GMT (Updated: 25 Jan 2021 8:29 PM GMT)

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,38,690 ஆக உயர்ந்துள்ளது.

மாஸ்கோ, 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ரஷ்யா நாட்டில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,38,690 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 456 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 69,918 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 3,150,763 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ரஷ்யாவில் தற்போது வரை 518,009 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story