உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது


உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 26 Jan 2021 12:04 AM GMT (Updated: 26 Jan 2021 2:02 AM GMT)

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது. உலகை  அளவில் கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.21 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

Next Story