பிரேசிலில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 2,20,435-ஆக உயர்வு


பிரேசிலில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 2,20,435-ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Jan 2021 8:28 PM GMT (Updated: 28 Jan 2021 8:28 PM GMT)

பிரேசிலில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 2,20,435-ஆக உயர்ந்துள்ளது.

மனாஸ்,

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 90,11,822ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 1,319 பேர் அந்த நோய்க்கு பலியானதைத் தொடா்ந்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2,20,237-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேற்றிய நிலவரப்படி, பிரேசிலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 77,98,655 பேர் அதில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 9,81,593 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடா்ந்து சிசிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story