பாகிஸ்தானிய பயங்கரவாத குழு தலைவர் சாலையோர குண்டுவெடிப்பில் உயிரிழப்பு


பாகிஸ்தானிய பயங்கரவாத குழு தலைவர் சாலையோர குண்டுவெடிப்பில் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 Jan 2021 1:58 AM GMT (Updated: 29 Jan 2021 1:58 AM GMT)

பாகிஸ்தானிய பயங்கரவாத குழுவின் தலைவர் மங்கள் பாக் சாலையோர குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

காபூல்,

பாகிஸ்தான் நாட்டில் லஷ்கர் இ இஸ்லாம் என்ற பெயரில் பயங்கரவாத குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதன் தலைவராக மங்கள் பாக் என்பவர் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் தனது கூட்டாளிகளுடன் வாகனம் ஒன்றில் சென்றுள்ளார்.  அவர்களது வாகனம் அச்சின் மாவட்டத்தில் பந்தர் தாரா பகுதியில் வந்தபொழுது சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்து உள்ளது.

இந்த சம்பவத்தில் பயங்கரவாத குழுவின் தலைவர் மங்கள் பாக் கொல்லப்பட்டார்.  அவருடன் வந்தவர்களில் 2 கூட்டாளிகளும் கொல்லப்பட்டனர்.  இதனை மாகாண கவர்னர் ஜியாவுல்ஹக் அமர்கில் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

எனினும், இதுபற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் வெளியிட்டுள்ள செய்தியில், பாக் பலமுறை மரணம் அடைந்து இருக்கிறார்.  பின்னர் மீண்டும் தோன்றி காட்சி தருகிறார் என தெரிவித்து உள்ளது.  அமெரிக்க அரசு அவரது தலைக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு அறிவித்து உள்ளது.

இவரது குழுவானது போதை பொருள் கடத்தல், பிற விலையுயர்ந்த பொருட்களை கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பரிமாற்றத்தில் வரியை ஈட்டுதல் உள்ளிட்டவை வழியாக தனது குழுவுக்கு தேவையான வருவாயை ஈட்டி வந்துள்ளது.

Next Story