குற்றவாளிகளின் நோக்கத்தை கண்டறிய இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் - இஸ்ரேல் தூதர்


குற்றவாளிகளின் நோக்கத்தை கண்டறிய இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் - இஸ்ரேல் தூதர்
x
தினத்தந்தி 29 Jan 2021 6:51 PM GMT (Updated: 29 Jan 2021 6:51 PM GMT)

டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளின் நோக்கத்தை கண்டறிய இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே  ஜிண்டால் வீட்டின் அருகே  150 மீட்டர் தொலைவில்  இன்று  மாலை 5.05 மணியளவில்  குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. . இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார், 4 கார்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியள்ளது.

தகவலறிந்த டெல்லி போலீசார் அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடி உள்ளனர். தொடர்ந்து, குண்டுவெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புலனாய்வாளர்கள் அந்த இடத்திலிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.  இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த  குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அசம்பாவித சூழ்நிலையையும் தவிர்க்க அரசு கட்டிடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில்  மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியதாவது:-

குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியா, இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி கொண்ட 29வது ஆண்டு நினைவு நாளில் நடந்துள்ளது. குற்றவாளிகளின் நோக்கத்தை கண்டறிய, இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றார்.

Next Story