பயங்கரவாத தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - இந்தியாவுக்கான ஐ.நா.சபை பிரதிநிதி கவலை


பயங்கரவாத தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - இந்தியாவுக்கான ஐ.நா.சபை பிரதிநிதி கவலை
x
தினத்தந்தி 29 Jan 2021 11:20 PM GMT (Updated: 29 Jan 2021 11:20 PM GMT)

பயங்கரவாத தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தியாவுக்கான .ஐ.நா.சபை தூதர் கே.நாகராஜ் நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அரியா ஃபார்முலா கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி கே.நாகராஜ் நாயுடு கூறியதாவது:-

உலகளாவிய பயங்கரவாதத்தின் சமீபத்திய போக்கு, பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்  குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

பயங்கரவாத குழுக்களைப் பொறுத்தவரை, குழந்தைகள் பயங்கரவாதத்தில் தீவிரமாக பங்கேற்பாளர்களாக இருந்தாலும் அல்லது பயங்கரவாத குற்றவாளிகளைப் பாதுகாக்க மனித கேடயங்களாக இருந்தாலும் கையாளுதலுக்கு மிகவும் உள்ளாக்கப்படுகிறார்கள். 

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் குழந்தைகளின் மீது வழக்குத் தொடுப்பது, திருப்பி அனுப்புவது, மறுவாழ்வு அளிப்பது போன்ற உறுப்பு நாடுகளின் அவசர தேவையை இந்தியா அங்கீகரிக்கிறது என்றார்.

Next Story