மணமேடையில் கணவர் அனுமதியுடன் முன்னாள் காதலரை கட்டிப்பிடித்த மணப்பெண்! மணமகனுக்கு குவியும் பாராட்டு


மணமேடையில் கணவர் அனுமதியுடன் முன்னாள் காதலரை கட்டிப்பிடித்த மணப்பெண்! மணமகனுக்கு குவியும் பாராட்டு
x
தினத்தந்தி 30 Jan 2021 7:20 PM GMT (Updated: 30 Jan 2021 7:20 PM GMT)

இந்தோனேஷியாவில் கணவரின் அனுமதி கேட்டு மணமேடையில் மணப்பெண் முன்னாள் காதலரை கட்டிப்பிடித்த சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

ஜகார்த்தா,

இந்தோனேஷியாவில் மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண்ணை வாழ்த்துவதற்கு, அந்த பெண்ணின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு சென்றுள்ளார். மணமகனும், மணப்பெண்ணும் திருமண மேடையில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டிருக்கும்போது  மணப்பெண்ணின் முன்னாள் காதலன்  அவர்களை வாழ்த்துவதற்கு மண மேடைக்கு சென்றார். அப்போது அவரைப் பார்த்து வியந்த மணப்பெண், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். 

அப்போது, தன் கையை கொடுத்து வாழ்த்து சொல்ல முன் காதலன் முற்படும்போது, கையை கொடுக்க மறுக்கும் மணப்பெண், தன் வருங்கால கணவரை பார்கிறார். அவரிடம், ஒரே ஒரு முறை என் முன்னாள் காதலனை கட்டிப்பிடித்துக்கொள்ளவா? என வாய்விட்டு கேட்கிறார். மணப்பெண்ணின் அருகில் இருக்கும் மணமகனும் இதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறார். மணமகனின் சம்மதம் கிடைத்தவுடன் மணப்பெண், தன் முன்னாள் காதலரை பாசத்துடன் கட்டிப்பிடிக்கிறார்.

முன்னாள் காதலரும் கூச்சமாக, மணப்பெண்ணை கட்டியணைக்கிறார். பின்னர் மணமகனை கட்டி அணைக்கும், முன்னாள் காதலர் மனமாற அவர்களை வாழ்த்திவிட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

திருமண நாளில் ஏற்பட்ட எதிர்பாராத இந்த நிகழ்வு திருமணத்தை மட்டுமல்லாது சமூக வலைதளங்களையும் கலக்கி வருகிறது. பலரும் இந்த வீடியோவுக்கு வாழ்த்துகளையும், மணமகனின் செயலுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Next Story