ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா பாதிப்பு


ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2021 8:27 AM GMT (Updated: 13 Feb 2021 8:27 AM GMT)

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,13,799 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 79,194 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35.59 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story