இந்தியாவிடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம்


இந்தியாவிடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 26 Feb 2021 4:49 AM GMT (Updated: 26 Feb 2021 4:49 AM GMT)

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரேசிலியா,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,03,93,886 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,51,661 நபர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தினசரி 1500க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. 

இந்தியாவில் தயாரிகப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் அரசு நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் இந்த மருந்துகளை டெலிவரி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் 80 லட்சம் டோஸ் மந்துகள் மார்ச் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

Next Story