உலக செய்திகள்

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்தது + "||" + The number of corona victims in Russia has exceeded 43 lakhs

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்தது

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்தது
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 462 பேர் பலியான நிலையில், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 88,285 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பில் இருந்து இதுவரை 38.85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் தற்போது 3.27 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 53,335 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,59,056 ஆக அதிகரித்துள்ளது.
2. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,09,650 ஆக அதிகரித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,086 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,42,135 ஆக அதிகரித்துள்ளது.
5. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,37,049 ஆக அதிகரித்துள்ளது.