பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38.82 லட்சத்தை கடந்தது


பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38.82 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 7 March 2021 12:04 AM GMT (Updated: 7 March 2021 12:04 AM GMT)

பிரான்சில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.82 லட்சத்தைக் கடந்துள்ளது.

பாரிஸ்,

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில், பிரான்ஸ் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு ஒரே நாளில் 23,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38.82 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 170 பேர் பலியான நிலையில், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 88,444 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 2.64 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். பிரான்சில் தற்போது 35.29 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story