அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை


அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை
x
தினத்தந்தி 4 April 2021 6:11 PM GMT (Updated: 4 April 2021 6:11 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.

ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் திட்டமிட்டதை விட வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.அந்த வகையில் அமெரிக்காவில் புதிய சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கவனித்து வரும் வெள்ளை மாளிகை டாக்டர் சைரஸ் ஷாப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதேபோல் அமெரிக்காவில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டுள்ளதாகவும், 5 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 785 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

 


Next Story