துபாய் விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற வாலிபர் கைது


துபாய் விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 April 2021 12:55 AM GMT (Updated: 5 April 2021 12:55 AM GMT)

துபாயில் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். அவர் பிரான்ஸ் நாட்டு போலியான பாஸ்போர்ட்டுடன் எமிரேட்ஸ் விமானம் மூலம் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு செல்வதற்காக துபாய் விமான நிலையம் வந்தார். அப்போது அவரது பயண ஆவணங்களை ஊழியர் பரிசோதனை செய்தார். இதில், அவரது ஆவணங்கள் குறித்து ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

துபாய்,

துபாயில் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். அவர் பிரான்ஸ் நாட்டு போலியான பாஸ்போர்ட்டுடன் எமிரேட்ஸ் விமானம் மூலம் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு செல்வதற்காக துபாய் விமான நிலையம் வந்தார். அப்போது அவரது பயண ஆவணங்களை ஊழியர் பரிசோதனை செய்தார். இதில், அவரது ஆவணங்கள் குறித்து ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான அடையாள அட்டையை காண்பிக்குமாறு அலுவலர் கேட்டார். ஆனால் அவரிடம் அந்த ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், ‘‘துருக்கி நாட்டில் வசித்து வரும் ஒருவர் போலியான பாஸ்போர்ட் தயாரித்து தருவதாக கூறினார். இதற்காக அவரிடம் 12 ஆயிரத்து 957 திர்ஹாம் கட்டணமாக கொடுத்தேன். இதனையடுத்து அவர் பிரான்ஸ் நாட்டு பாஸ்போர்ட்டை தயாரித்து கூரியர் மூலம் துபாய் முகவரிக்கு அனுப்பி வைத்தார்’’ என்றார்.

இதையடுத்து போலீசார் அந்த நபரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story