இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் சார்ஜாவில், விபத்துகள் 35 சதவீதம் குறைந்தன போலீஸ் அதிகாரி தகவல்


இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் சார்ஜாவில், விபத்துகள் 35 சதவீதம் குறைந்தன போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 April 2021 10:51 AM GMT (Updated: 16 April 2021 10:51 AM GMT)

இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் சார்ஜாவில், விபத்துகள் 35 சதவீதம் குறைந்தன போலீஸ் அதிகாரி தகவல்.

சார்ஜா,

சார்ஜா போலீசின் போக்குவரத்து மற்றும் லைசென்சிங் துறையின் இயக்குனர் முகம்மது அல்லை அல் நக்பி கூறியதாவது:-

சார்ஜா பகுதியில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான விபத்துகள் 35 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் 94 விபத்துகளும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 145 விபத்துகளும் நடந்துள்ளன. இந்த விபத்துகள் நடக்க முக்கிய காரணமாக இருந்து வருவது வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் திடீரென தங்களது வழித்தடத்தை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றுவதே ஆகும்.

வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது செல்போன்களை பயன்படுத்தி வருவதும் மற்றொரு முக்கிய காரணம் ஆகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது செல் போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் 200 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் 4 கருப்பு புள்ளிகளும் வழங்கப்படும். எனவே வாகனங்களை ஓட்டும் போது சாலையில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். 24 கருப்பு புள்ளிகள் பெற்றவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். சாலை விபத்துகள் குறைவதற்கு பல்வேறு சாலைகளிலும் போலீஸ் ரோந்து பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story