உலக செய்திகள்

அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை + "||" + Shooting near a sensational airport in the United States; 8 deaths; Suicide by shooting with killer gun

அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரவு நேரப் பணியாளர்கள் தங்களது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நிறுவனத்துக்குள் நுழைந்தார். பின்னர் அவர் அங்கிருந்த நபர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. அவர்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த மர்ம நபர் விடாமல் விரட்டிச்சென்று ஒவ்வொருவரையும் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளினார்.இந்த கோர சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனிடையே இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் யார் இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு கொலை மிரட்டல் வருகிறது -நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த் வலைத்தள பக்கத்தில் சமூக, அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
2. வாலிபர் அடித்துக்கொலை
திருமங்கலம் அருகே மதுபோதையில் வாலிபரை அடித்துக்ெகான்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்
3. அரவக்குறிச்சி அருகே கடப்பாரையால் அடித்து தாய் கொலை மகன் கைது
அரவக்குறிச்சி அருகே கடப்பாரையால் அடித்து தாய் கொலை செய்யப்பட்டார்.
4. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் திரண்டதால் பரபரப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
5. கல்பாக்கம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி
கல்பாக்கம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.