உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.44 கோடியை தாண்டியது


உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.44 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 22 April 2021 1:25 AM GMT (Updated: 22 April 2021 1:25 AM GMT)

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.44- கோடியை தாண்டியது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில்  கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.   கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.44 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.25 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.70- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ்  பாதிப்புடன் 1.87- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


Next Story