பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி


பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி
x
தினத்தந்தி 29 May 2021 5:07 PM GMT (Updated: 29 May 2021 5:07 PM GMT)

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட வேன் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபர்பாத் நகருக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப் பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

விபத்துக்கு மோசமான சாலைகளும், போக்குவரத்து விதிகளைச் சரியாகக் கடை பிடிக்காததும், கவனக்குறை வாக வாகனங்களை ஓட்டு வதுமே காரணம் என, அதிகாரி கள் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story