உலக செய்திகள்

ஓமனில் புதிதாக 1,640 பேருக்கு கொரோனா; 19 பேர் பலி + "||" + Corona for 1,640 newcomers in Oman; 19 killed

ஓமனில் புதிதாக 1,640 பேருக்கு கொரோனா; 19 பேர் பலி

ஓமனில் புதிதாக 1,640 பேருக்கு கொரோனா; 19 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,640 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 
ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 951 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90.3 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 19 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 467 ஆக அதிகரித்தது. தற்போது உடல்நலக்குறைவால் 345 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத், புனேவில் இருந்து தமிழகத்துக்கு ஒரே நாளில் 99 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன
ஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு தொகுப்பு மற்றும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலம் ஒரே நாளில் 99 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
2. கொரோனா தொற்று பரவலை குறைக்க தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் குழு பரிந்துரை
கொரோனா தொற்று பரவலை குறைப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அதிகாரிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
3. 358 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் 16,813 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16,813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 358 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. புதிதாக 294 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.