கனடாவில் வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் 233 பேர் பலி


கனடாவில் வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் 233 பேர் பலி
x
தினத்தந்தி 30 Jun 2021 4:41 PM GMT (Updated: 30 Jun 2021 4:41 PM GMT)

கனடாவில் கடந்த வெள்ளி முதல் திங்கள் வரையிலான 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டாவா,

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது.  ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அங்கு கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. 

மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. 

வெப்ப அலை தொடங்கிய நான்கு நாட்களில் கனடாவில் 233 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்கின்றனர்.

மக்களை வீடுகளை விட்டு வர வேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்கும் படியும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதிக குடிநீர் பருகும்படியும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் கடும் வெயில் அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு நகரங்களான போர்ட்லேண்ட், ஓரிகான், சியாட்டில், வாஷிங்டன் ஆகிய இடங்களிலும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியிருப்பதாக கூறுகின்றனர்.

Next Story