உலக செய்திகள்

ரஷியாவில் 28 பேருடன் மாயமான விமானம் மலையில் மோதி நொறுங்கியது; 19 உடல்கள் மீட்பு + "||" + Russia recovers bodies of nine plane crash victims

ரஷியாவில் 28 பேருடன் மாயமான விமானம் மலையில் மோதி நொறுங்கியது; 19 உடல்கள் மீட்பு

ரஷியாவில் 28 பேருடன் மாயமான விமானம் மலையில் மோதி நொறுங்கியது; 19 உடல்கள் மீட்பு
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி ‘ஆன்டனோவ் ஆன்-26' ரக பயணிகள் விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பலானா நகர மேயர் ஓல்கா மொகிரோ உள்பட 22 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனா்.
பலானா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக, அந்த விமானத்துடனான தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டது. மேலும், ரேடாா் பாா்வையிலிருந்தும் அந்த விமானம் மறைந்தது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்றும் அதில் பயணித்த 28 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே மாயமான விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இருள் சூழ்ந்ததால் நேற்றுமுன்தினம் இரவு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் நேற்று காலை மீண்டும் தொடங்கின.அப்போது விபத்து நடந்த இடத்திலிருந்து 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய 9 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு; பயணித்த 6 பேரும் பலி
விமானம் விபத்தில் சிக்கியதும், அதில் பயணித்த 6 பேரும் பலியாகி விட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி
ரஷியாவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவரை போலீசாரை கைது செய்தனர்.
3. ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி
துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர்
4. ரஷியாவில் நடுவானில் ராணுவ விமானத்தில் தீ; தரையில் விழுந்து வெடித்து சிதறியது; 3 பேர் பலி
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே நேற்று காலை அந்த நாட்டு விமான‌ படைக்கு சொந்தமான ‘ஐஎல்-112 வி' ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
5. ரஷியாவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியது; 8 பேர் பலி
ரஷிய நாட்டில் கம்சாத்கா தீபகற்பத்தில் உள்ள குரில் ஏரியில் நேற்று ஒரு சுற்றுலா ஹெலிகாப்டர் விழுந்து மூழ்கியது. இந்த ஹெலிகாப்டரில் 16 சுற்றுலா பயணிகளும், சிப்பந்திகளும் பயணித்ததாக தகவல்கள் கூறுகின்றன.