இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா; பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டார்


இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா; பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டார்
x
தினத்தந்தி 18 July 2021 8:15 PM GMT (Updated: 18 July 2021 8:15 PM GMT)

சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டார்.

லண்டன்,

இங்கிலாந்து கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இருப்பினும் தடுப்பூசிகள் வந்த பிறகு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக இங்கிலாந்து அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜீத் ஜாவீத் சையதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனது வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் சாஜித் ஜாவித் சையத் போட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தான், பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்று அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26 ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

Next Story