நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு


நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
x
தினத்தந்தி 31 Aug 2021 3:43 AM GMT (Updated: 31 Aug 2021 3:43 AM GMT)

நியூசிலாந்தில் ரிக்டரில் 6.1 அளவிலான கடுமையான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

ஆக்லாந்து,


நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 6.1 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.




Next Story