புதினுடன் சிரியா அதிபர் சந்திப்பு : கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை


புதினுடன் சிரியா அதிபர் சந்திப்பு : கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 14 Sep 2021 8:06 AM GMT (Updated: 14 Sep 2021 8:06 AM GMT)

சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தினார்.

மாஸ்கோ,

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரிய அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை துருக்கி அளித்து வருகிறது. 

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் இன்று சந்தித்தார். 

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இட்லிப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்தும், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றுவது ரஷிய அதிபரிடம் அசாத் ஆலோசனை நடத்தினார். 

இட்லிப் பகுதியில் சண்டை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் ரஷிய அதிபரை சிரியா அதிபர் சந்தித்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Next Story